Sunday, 9 October 2011

buhari



தொழுகை நேரங்கள்

ஸுஹ்ரி அறிவித்தார்.
உமர் இப்னு அப்தில அஸீஸ் ஒரு நாள் தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது உர்வா இப்னு ஸுபைர் அவரிடம் வந்து பின்வரும் நிகழ்ச்சியைக் கூறி (அவரின் செயலைக் கண்டிக்கலா)னார்கள்.இராக்கில் இருக்கும்போது ஒரு நாள் முகீரா இப்னு ஷுஅபா(ரலி) தொழுகையைத் தாமதப் படுத்திவிட்டார்கள். அப்போது அபூ மஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி), அவரிடம் வந்து, 'முகீராவே! இது என்ன? ஜிப்ரீல்(அலை) அவர்கள் இறங்கி (ஃபஜ்ருத்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (லுஹர்) தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (அஸர்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்பு (மக்ரிப்) தொழ நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின் இஷா தொழ, நபி(ஸல்) அவர்களும் தொழுதார்கள். பின்னர் நபியிடம் "இந்நேரங்களில் தொழ வேண்டும் என்றே உமக்குக் கட்டளையிடப் பட்டுள்ளது' என்றும் ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். இதை நீர் அறியவில்லையா?' என்று கேட்டார்கள். (இந்த நிகழ்ச்சியை உர்வா இப்னு ஸுபைர், உமர் இப்னு அப்தில் அஸீஸ் அவர்களிடம் கூறிய போது) 'உர்வாவே நீர் கூறுவது என்னவென்பதைக் கவனித்துப் பாரும்! நபி(ஸல்) அவர்களுக்குத் தொழுகையின் நேரத்தை ஜிப்ரீல்(அலை) அவர்கள் நிர்ணயித்தார்களா?' என்று உமர் இப்னு அப்தில் அஸீஸ் கேட்டார்கள்.


தொழுகை

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் கஅபாவினருகில் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது குரைஷிகள் தங்கள் சபையில் குழுமியிருந்தனர். 'இந்த முகஸ்துதி விரும்பியை நீங்கள் பார்க்கவில்லையா?' என்று அவர்களில் ஒருவன் கேட்டான். இன்னாருடைய (அறுக்கப்பட்ட) ஒட்டகத்தினருகில் சென்று அதன் சாணத்தையும் இரதத்தையும் மற்றும் கருப்பையையும் எடுத்து வந்து இவர் ஸஜ்தாச் செய்யும் வரை காத்திருந்து அதை இவரின் இரண்டு தோள் புஜத்திலும் போட்டுவிட உங்களில் யார் தயார்?' என்று அவன் கேட்டான்.
அவர்களில் மிக மோசமான ஒருவன் அதற்கு முன் வந்தான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்தபோது அதை அவர்களின் தோள் புஜத்தில் போட்டான். நபி(ஸல்) அவர்கள் ஸஜ்தாவிலேயே கிடந்தார்கள். ஒருவரின் மீது ஒருவர் சாய்ந்து விடும் அளவுக்குக் குரைஷிகள் சிரிக்கலானார்கள். சிறுமியாக இருந்த ஃபாதிமா(ரலி) அவர்களிடம் ஒருவர் சென்று இதைத் தெரிவித்ததும் அவர்கள் ஓடாடி வந்தார்கள். அவர்கள் வந்து அசுத்தங்களை அகற்றும் வரை ஸஜ்தாவிலேயே நபி(ஸல்) அவர்கள் கிடந்தார்கள். பின்பு குரைஷிகளை ஃபாதிமா(ரலி) ஏச ஆரம்பித்தார்கள்.
நபி(ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் 'இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்! இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்! இறைவா! குரைஷிகளை நீ பார்த்துக் கொள்!" என்று கூறிவிட்டு 'அம்ர் இப்னு ஹிஷாம், உத்பா இப்னு ரபீஆ, ஷைபா இப்னு ரபீஆ, வலீத் இப்னு உக்பா, உமய்யா இப்னு கலப், உக்பா இப்னு அபீ முயீத், உமாரா இப்னு வலீத் ஆகியோரை இறைவா! நீ பார்த்துக் கொள்! என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீது அணையாக பத்ருப் போரில் இவர்களெல்லாம் வேரற்ற மரங்கள் போல் மாண்டு மடிந்ததையும் பத்ருக்களத்திலுள்ள பாழடைந்த கிணற்றில் இவர்கள் போடப் பட்டதையும் பார்த்தேன்.
"பாழடைந்த கிணற்று வாசிகள் சாபத்திற்கு ஆளானார்கள்" என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.




தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே உறங்கிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது (விரலால்) என் காலில் குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். இவ்வாறிருக்க எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே?




தொழுகை


மைமூனா(ரலி) அறிவித்தார்.
"நான் மாதவிடாய்க்காரியாக இருக்கும் சமயத்தில் நபி(ஸல்) அவர்களின் அருகே படுத்துறங்குவேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது அவர்களின் ஆடை என் மேல் படுவதுண்டு.




தொழுகை

மைமூனா(ரலி) அறிவித்தார்.
என்னுடைய விரிப்பு நபி(ஸல்) அவர்கள் தொழும் விரிப்புடன் பட்டுக் கொண்டிருக்கும். சில சமயம் நான் விரிப்பில் இருக்கும்போது அவர்களின் ஆடை என் மேல் படுவதுண்டு.




தொழுகை

அபூ கதாதா அல் அன்ஸாரி(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தங்களின் மகள் ஸைனப் அவர்களின் குழந்தை 'உமாமா'வைத் (தோளில்) சுமந்த நிலையில் தொழுதிருக்கிறார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லும்போது இறக்கி விடுவார்கள். நிற்கும்போது தூக்கிக் கொள்வார்கள்.




தொழுகை

ஸுஹ்ரி அறிவித்தார்.
நான் என் தந்தையின் உடன் பிறந்தாரிடம் எவை (குறுக்கே சென்றால்) தொழுகை முறிக்கும் என்று கேட்டேன். அதற்கவர் 'எதுவும் முறிக்காது' என்று கூறிவிட்டு, 'நபி(ஸல்) அவர்களின் குடும்பத்திற்குரிய விரிப்பில், கிப்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்கும்போது நபி(ஸல்) இரவில் தொழுவார்கள்' என்று ஆயிஷா(ரலி) கூறினார் என குறிப்பிட்டார்.




தொழுகை


மஸ்ரூக் அறிவித்தார்.
ஆயிஷா(ரலி) அவர்களிடம் தொழுகையை முறிக்கும் காரியங்கள் பற்றிப் பேசப்பட்டது. சிலர் நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே சென்றால்) தொழுகையை முறிப்பர் என்று கூறினர். அதைக் கேட்ட ஆயிஷா(ரலி) 'எங்களை கழுதைகளுடனும் நாய்களுடனும் ஒப்பிட்டு விட்டீர்களே! நிச்சயமாக கிப்லாவுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே கட்டிலில் நான் படுத்திருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் தொழுவார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவை ஏற்பட்டால் எழுந்து அமர்வது நபி(ஸல்) அவர்களுக்குத் தொல்லை தராமல் அவர்களின் கால் வழியாக நழுவி விடுவேன்' என்று கூறினார்கள்.




தொழுகை


ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். என் கால்களிரண்டும் அவர்களின் முகத்துக்கு நேராக இருக்கும். அவர்கள் ஸஜ்தா செய்யும்போது (விரலால் என் காலில்) குத்துவார்கள். நான் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் எழுந்ததும கால்களை நீட்டிக் கொள்வேன். அன்றைய காலத்தில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் கிடையாது.




தொழுகை

ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களின் விரிப்பில் அவர்களுக்குக் குறுக்கே உறங்கிக் கொண்டிருப்போன். அவர்கள் வித்ருத தொழ எண்ணும்போது என்னை எழச் செய்வார்கள். அதன்பின்னர் வித்ருத் தொழுவேன்.



;;
Post a Comment