Sunday, 20 November 2011


தளம் பற்றி

My Photo
மணவாளக்குறிச்சியைப் பற்றி பிரபஞ்சம் முழுவதும் அறிந்திட... மணவை மலர்.
மணவை மலர். POWERED BY BLOGGER.
மணவை மலர்
சின்னவிளையில் 
குழந்தைகள் தின விழா

நாள்: 14-11-2011


   மணவாளக்குறிச்சி சின்னவிளை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.  மணவாளக் குறிச்சி பேரூராட்சித்தலைவி திருமதி. ஜோஸ்பின் ரீட்டா கலந்து கொண்டார். குழந்தைகள் தின விழாவில் பல கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேரூராட்சிதலைவி  குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கினார். விழாவில் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 




இளம் விஞ்ஞானியாக
மணவாளக்குறிச்சி மாணவி தேர்வு


நாள்: 15-11-2011


    மனடைக்காடு அருகே உள்ள கூட்டுமங்கலம் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவி ரஞ்சனி, குமரி அறிவியல் பேரவை சார்பில் ஆற்றலும் சுற்றுச்சூழல் சவால்களும் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இளம் விஞ்ஞானியாக மாணவி ரஞ்சனி தேர்வு செய்யப்பட்டார். இவர் ஆசிரியை விஜயலெட்சுமி அவர்களின் வழிக்காட்டுதலில் ஆய்வை சமர்ப்பித்தார். இளம்விஞ்ஞானியாக தேர்வுச் செய்யப்பட்ட மாணவி ரஞ்சனியை பள்ளித் தாளாளர் மணிகண்டன், உதவித் தாளாளர் ரெஜிஷ் கிருஷ்ணன், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மாணவி ரஞ்சனி மணவாளக்குறிச்சி ஆண்டார்விளையை சேர்ந்த திரு. இராமச் சந்திரன் அவர்களின் மகள் ஆவார்.

Welcome To Manavai Malar!
மணவாளக்குறிச்சி 
பாபுஜி மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி 

நாள்: 16-11-2011

    மணவாளக்குறிச்சி பாபுஜி நினைவு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு இன்ஸ்பெயர் அவார்டுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது. தக்கலை கல்வி மாவட்ட அதிகாரி சார்லட் சஜிதா தலைமை தாங்கினார். கண்காட்சியை தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப உதவி இயக்குனர் லட்சுமி தொடக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் ஜாண் கிறிஸ்டோபர் முன்னிலை வகித்தார்.

      பள்ளித்தனி அலுவலர் ரஞ்சிதம், தக்கலை கல்வி மாவட்ட ஆய்வாளர் ஐயப்பன், ஆசிரியர் மன்ற செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கண்காட்சியில் தக்கலை கல்வி மாவட்டத்துக்குட்பட்ட 167 பள்ளிகள் சார்பாக 287 மாணவ, மாணவியர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கண்டு களித்தனர். கண்காட்சி நடுவர்களாக ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியர் ஜேம்ஸ், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி பேராசிரியை மெர்சி லீலாவதி, பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியை சேர்ந்த பேராசிரியை மேரி ஜெசிந்தா கலா ஆகியோர் இருந்தனர். இங்கு தானியங்கி ரெயில்வே கேட், சூரிய ஒளி மூலம் வீட்டு மின்சாரம் தயாரித்தல், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரித்தல், திடக்கழிவு மேலாண்மை போன்ற படைப்புகள் இருந்தன. சிறந்த படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

சபரிமலைச் செல்ல
மாலை அணிந்தனர் ஐயப்ப பக்தர்கள்

நாள்: 17-11-2011 

        புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பசாமி கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டின் மண்டல பூஜை காலம் கார்த்திகை 1 -ம் தேதி தொடங்கியது. இதற்காக அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதி மாலை அணிவித்து விரதமிருந்து சபரிமலை சென்று அய்யப்பசாமியை வணங்கி வருவர்.

          இதன்படி, மணவாளக்குறிச்சி பக்தர்கள் கார்த்திகை 1-ம் தேதி (17-11-2011) வியாழக்கிழமை) அன்று மாலை அணிந்து கொண்டு, சபரிமலை சென்று திரும்பும் காலம் வரை விரதம் மேற்கொள்கின்றனர்.

      மணவாளக்குறிச்சி பகுதியிலுள்ள பிள்ளையார் கோவில், வடக்கன் பாகம் அம்மன் கோவில், கல்லடி விளை ஸ்ரீ ஆற்றுமாடன் தம்புரான் ஆலையம் உட்பட பல கோவில் களில் பக்தர்கள் மாலை அணிவித்தனர். கோவில்களில் அய்யப்ப பக்தர்களின் சரண கோஷங்கள் கார்த்திகை முதல் நாளிலிருந்து தொடங்கி, சபரிமலை செல்லும் காலம் வரை நடைபெறும். பக்தர்கள் பெரும்பாலோர் தை முதல் நாள் சபரிமலையில் தோன்றும் மகர விளக்கை காண செல்வர். அதுவரை பக்தர்கள் காலையிலும், மாலையிலும் குளித்து, கடும் விரதம் மேற்கொள்வர்.


மணவாளக்குறிச்சி பகுதியில்
மழை

நாள்: 17-11-2011 

     மணவாளக்குறிச்சி பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கடுமையாக மொழிந்து, பின்னர் படிப்படியாக குறைந்தது. இந்த மழை தமிழகம் முழுவதும் பெய்தது. இதனால் பல மாவட்டங்களில் பல சேதங்கள் ஏற்பட்டன. சில நாட்களாக கடுமையான வெயில் அடித்துகொண்டிருந்தது. இந் நிலையில் 17, 18-11-2011 ஆகிய இரண்டு நாட்களும் பரவலாக ஊர் முழுவதும் மழை பொழிந்தது. அதிலும் 17- ம் தேதி மதியத்திற்கு மேல் மழை சற்று அதிகமாகவே பெய்தது. குளிர்காலம் தொடங்கி விட்டதால் அதிகாலையில் பனி பொழிவும் காணப்படுகிறது. 

மணவாளக்குறிச்சி மெயின் ரோடு 

மணவாளக்குறிச்சி சந்திப்பின் தோற்றம்






Post a Comment