Wednesday, 23 November 2011

manavai malar


மணவை மலர்

முட்டத்தில் இருந்து
மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு 
வழியாக புதிய பேருந்து போக்குவரத்து
அமைச்சர் பச்சைமால் தொடங்கி வைத்தார்

நாள்: 21-11-2011
    முட்டத்திலிருந்து மண்டைக்காடு, மணவாளக்குறிச்சி வழியாக திற்பரப்பு அருவிக்கு புதிய வழித்தடத்தில் பஸ்போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அமைச்சர் பச்சைமாலிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர்.  அவர்களின் கோரிக்கையை ஏற்று புதிய பஸ் போக்குவரத்து தொடக்கவிழா நேற்று மண்டைக்காடு பகவதியம்மன் எதிரில் வைத்து நடைபெற்றது. விழாவில் வனத்துறை அமைச்சர் பச்சைமால் கலந்து கொண்டு கொடியசைத்து பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சங்கரலிங்கம், மண்டல மேலாளர்கள் தாணுலிங்கம், முத்து கிருஷ்ணன், கோட்ட மேலாளர் அன்பு ஆபிரகாம், குளச்சல் கிளைமேலாளர் கரோலின், திங்கள்சந்தை கிளைமேலாளர் சுபாஷ், மண்டைக்காடு பேரூர் செயலாளர் விஜயக்குமார், அண்ணா தொழிற்சங்கத்தலைவர் விஜயகுமார், ஸ்ரீதர், அஜீஸ், ஆஸ்டின், உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.Welcome To Manavai Malar!


புதிய ATM திறப்பு

   மணவாளக்குறிச்சி ஸ்டேட் பாங்க ஆப் திருவாங்கூர் கிளை முதலில் அரசு தொடக்க பள்ளி அருகாமையில் இருந்து வந்தது. அங்கு அதிக  வாடிக்கையாளர்கள் இருப்பதற்கான வசதி இல்லாமல் இருந்தது. இடவசதி மிகக்குறைவாகவே இருந்தது. இதை கருத்தில் கொண்டு, மணவாளக்குறிச்சி சந்திப்பிலிருந்து குளச்சல் செல்லும் சாலையில் மிக அருகிலேயே புதிய பொலிவுடனும், விசாலமான இட வசதிவுடனும் கூடிய வங்கி கட்டப்பட்டது. வங்கி ஒரு மாத காலத்திற்கு முன்னரே திறக்கப்பட்டது. ATM மட்டும் இந்திய அறிய மணல் ஆலை பக்கத்தில் இருந்து வந்தது. இதனால் மக்கள் கொஞ்சம் தூரம் சென்று பணம் எடுக்கும் சூழ்நிலை இருந்தது. 

    தற்போது, புதிய வங்கி அருகில் வாடிக்கையாளர்களின் வேண்டுகோளை ஏற்று புதிய ATM திறக்கப்பட்டுள்ளது. இது அனைத்து வங்கி வாடிக்கையாளர் களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது.

உலக மீனவர் தினம்

நாள்: 21-11-2011
    உலக மீனவர் தினம் 21-11-2011  அன்று மீனவர்களால் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. நமது ஊரை சுற்றிய சின்னவிளை, பெரியவிளை, கடியப்பட்டணம், முட்டம் போன்ற பகுதிகளில் மீனவர்கள் கொண்டாடினர். இதனால் அன்று ஒரு நாள் மட்டும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமலும், கடைகளில் மீன்கள் விற்பனை செய்யாமலும் இருந்தனர். 

       இந்நிகழ்வையொட்டி, பல நிகழ்வுகள் நடத்தப்பட்டன. நாகர்கோவில் மற்றும் நீரோடி காலனியில் இருந்து உலக மீனவர் தின தொடர் ஜோதி ஓட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன் டேவிட்சன் தொடங்கி வைத்தார். இந்த ஓட்டம் பல மீனவ கிராமங்களுக்கு சென்று இறுதியில் முட்டம் வந்து சேர்ந்தது. இங்கு, மீனவர் தின மாநாடு நடைபெற்றது. இதில், மீன்துறை இயக்குனரும், முன்னாள் குமரி மாவட்ட கலெக்டருமான ராஜேந்திர ரத்னு, இந்தாள் கலெக்டர் மதுமதி, ஆயர், பிரின்ஸ் MLA, பஞ்சாயத்து தலைவர்கள், பங்குதந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பல கலை நிகழ்ச்சிகள் நடந்தது.  

பஸ் கட்டணம் உயர்வு

  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 17-11-2011 அன்று தமிழகத்தில் பால்விலை, பேருந்து கட்டணம் மற்றும் மின்சார கட்டணம் போன்றவைகளின் விலை உயர்வை அறிவித்தார். அதன்படி, பால்விலை 19-11-2011 முதல் லிட்டருக்கு ரூ.6.35 அதிகரித்தது. பேருந்து கட்டணம் 18-11-2011 முதல் உயர்த்தப்பட்டது.

     மணவாளக்குறிச்சியில் இருந்து, மற்ற பகுதிகளுக்கு பேருந்து கட்டணம் பின்வருமாறு,

சாதாரண பேருந்து
அம்மாண்டிவிளை             4.00
வெள்ளமடி           5.00
கணபதிபுரம்         6.00
ராஜாக்கமங்கலம்    7.00
நாகர்கோவில்        9.00
திங்கள்சந்தை       6.00
தக்கலை       9.00
பிள்ளையார்கோவில்   4.00
குறும்பனை     7.00
குளச்சல்       6.00

TSS பேருந்து

நாகர்கோவில்   12.00
குளச்சல்      8.00
மணக்குடி    12.00
முள்ளூர்துறை     12.00
குறைந்த கட்டணம்    5.00

தாழ்தள பேருந்து

நாகர்கோவில்     17.00
அம்மாண்டிவிளை      7.00
குளச்சல்      10.00புதிய வங்கி திறப்பு 

   மணவாளக்குறிச்சி, முட்டம் மற்றும் கடியப்பட்டணம் பகுதிகளை கருத்தில் கொண்டு கடியப்பட்டணம் பகுதியில் புதிய "யூனியன் பாங்க ஆப் இந்தியா" திறக்கப்பட்டது. இதை கோட்டார் மறைமாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் திறந்து வைத்தார். பங்கு தந்தை செல்வராஜ் தலைமை தாங்கினார். வங்கி துணை பொது மேலாளர் ஜாண் வரவேற்று பேசினார். பாபுஜி கல்வி நிறுவனங்களின் தாளாளர் ATM சென்டரை திறந்து வைத்தார். வங்கி கிளை மேலாளர் சார்லஸ் காலின்ஸ் நன்றி கூறினார்.


சின்னவிளையில் 
குழந்தைகள் தின விழா

நாள்: 14-11-2011


   மணவாளக்குறிச்சி சின்னவிளை அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது.  மணவாளக் குறிச்சி பேரூராட்சித்தலைவி திருமதி. ஜோஸ்பின் ரீட்டா கலந்து கொண்டார். குழந்தைகள் தின விழாவில் பல கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பேரூராட்சிதலைவி  குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பரிசுகள் வழங்கினார். விழாவில் ஊர் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Post a Comment